Oct 25, 2025
Thisaigal NewsYouTube
மியான்மாரில் பலி எண்ணிக்கை 3,145ஆக உயர்வு
உலகச் செய்திகள்

மியான்மாரில் பலி எண்ணிக்கை 3,145ஆக உயர்வு

Share:

மியன்மார், ஏப்ரல்.04-

மியான்மாரிக் அடுத்தடுத்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மியான்மாரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மாரின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து போயின. வானுயரக் கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணி சவாலாக உள்ளது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

4,500க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர். 221 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்க மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார் நிறுவனங்கள் தொண்டு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News