திம்பு, செப்டம்பர்.08-
பூடானில் ஒரே நாளில் இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
பூடானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவானதாக நில நடுக்கவியல் மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நில நடுக்கம் பதிவான சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு நில நடுக்கம் உணரப்பட்டது. இந்நில நடுக்கம் ரிக்டரில் 2.8 ஆக பதிவாகி இருக்கிறது.
அடுத்தடுத்த நில நடுக்கங்களால் எவ்வித உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், மக்கள் அச்சம் அடைந்தனர் என்று அந்நாட்டின் தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
பூடானில் வழக்கமாக சக்தி வாய்ந்த நில நடுக்கங்களை விட, மிதமான நிலநடுக்கங்கள் ஆபத்தானவை. இந்த நில நடுக்கங்களி அதிர்வுகள் நிலத்தின் மேற்பரப்புக்கு பயணிக்க குறுகிய நேரத்தை எடுத்துக் கொள்வதே இதற்கு காரணம். மேலும் இதன் மூலம் அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.