Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சிங்கப்பூரில் மலேசியப் பெண் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிங்கப்பூரில் மலேசியப் பெண் கைது

சிங்கப்பூர், ஜூன்.26-

சிங்கப்பூருக்குள் போதைப்பொருளைக் கடத்த முயற்சி செய்ததாக நம்பப்படும் மலேசியப் பெண் ஒருவரை அந்நாட்டு போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

46 வயது மதிக்கத்தக்க அந்த மலேசியப் பெண், ஒரு லட்சத்து 42 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான 2 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளைக் கடத்த முயற்சித்த போது அவர், சிங்கப்பூர் வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி மையத்தில் பிடிபட்டதாக சிங்கப்பூர் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவான ஐசிஏ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →