Nov 22, 2026
Thisaigal NewsYouTube

உலகின் மிகப் பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உலகின் மிகப் பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிப்பு

பெய்ஜிங், டிசம்பர்.21-

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப் பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.

சீனா, உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பில், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த, 2021ல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 லட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தவிர, ஜின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தில் உள்ள மலையில், 10 லட்சம் கிலோ தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்டமான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப் பெரிய தங்க இருப்பு என கூறப்படுகிறது. அண்மையில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 லட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும்.

இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக லைஜோ பகுதி, சீனாவின் தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →
கம்போடியா – தாய்லாந்து அமைதி ஒப்பந்தத்தில் அன்வாரின் பங்களிப்பிற்கு டிரம்ப் பாராட்டு

கம்போடியா – தாய்லாந்து அமைதி ஒப்பந்தத்தில் அன்வாரின் பங்களிப்பிற்கு டிரம்ப் பாராட்டு

எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசியப் பிரதமர் மன்னிப்பு

எல்லை தாண்டிய புகைமூட்டம்: மலேசியா, சிங்கப்பூரிடம் இந்தோனேசியப் பிரதமர் மன்னிப்பு

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் 365 சேவைகள் திடீர் முடக்கம்

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப் 365 சேவைகள் திடீர் முடக்கம்

இந்தோனேசியாவில் அரசியல் அதிர்வு! அதிபரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மூவர் கைது – தலைநகரில் இராணுவத்தினர் குவிப்பு

இந்தோனேசியாவில் அரசியல் அதிர்வு! அதிபரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மூவர் கைது – தலைநகரில் இராணுவத்தினர் குவிப்பு

மலேசியா, சிங்கப்பூர் வழியாக உம்ரா பயணம் வேண்டாம்: யாத்ரீகர்களுக்கு இந்தோனேசியா வேண்டுகோள்

மலேசியா, சிங்கப்பூர் வழியாக உம்ரா பயணம் வேண்டாம்: யாத்ரீகர்களுக்கு இந்தோனேசியா வேண்டுகோள்

சிங்கப்பூரில் ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்வு: 2029 முதல் புதிய நடைமுறை

சிங்கப்பூரில் ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்வு: 2029 முதல் புதிய நடைமுறை