Oct 30, 2025
Thisaigal NewsYouTube
இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்திற்கு வரவுள்ளன
உலகச் செய்திகள்

இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்திற்கு வரவுள்ளன

Share:

நியூபிரிட்ஜ், ஜூன்.11-

உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட பிரிட்டன் இளவரசி டயானா அணிந்திருந்த பல ஆடைகள் ஏலத்தில் விடத் திட்டமிடப்பட்டுள்ளன. இது கலிபோர்னியாவில் உள்ள பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனத்தால் விற்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 31, 1997 அன்று பிரான்சில் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் அவர் காலமான நிலையில் தற்போது இளவரசி டயானாவைப் பற்றிய பேச்சு மீண்டும் வந்துள்ளது.

பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனம் இளவரசி டயானாவுக்குச் சொந்தமான பல ஆடைகளை ஏலத்தில் விட திட்டமிட்டுள்ள நிலையில், டயானாவின் ஸ்டைல் ​​மற்றும் றோயல் கலெக்ஷன் என்ற தலைப்பில் ஏலம் ஜூன் 26 அன்று நடைபெற உள்ளது. இளவரசி டயானாவுக்குச் சொந்தமான அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் ஒரே நேரத்தில் ஏலம் விடப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி பிரிட்டனின் தசைநார் சிதைவுச் சங்கத்திற்குச் செல்லும் என்று ஜூலியன் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News