Oct 29, 2025
Thisaigal NewsYouTube
காஸாவில் குழந்தைகள் இறக்கும் அபாயம்: ஐநா எச்சரிக்கை
உலகச் செய்திகள்

காஸாவில் குழந்தைகள் இறக்கும் அபாயம்: ஐநா எச்சரிக்கை

Share:

நியூயார்க், மே.20-

காஸா பகுதிக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்காவிடில், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்கலாம் என ஐநா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காஸாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 11 வாரங்களாக காஸாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது குறைந்த அளவிலான உதவிப் பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்ல மட்டும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி அளித்துள்ளார்.

காஸாவிற்குள் இப்போது அனுமதிக்கப்படும் குறைந்த அளவிலான உதவிகள், உணவின்றி பஞ்சத்தில் தவித்து வரும் பொது மக்களுக்குப் போதுமானதாக இருக்காது. தற்போது 5 லாரிகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இந்த சிறிய அளவிலான உதவி கூட இன்னும் தேவைப்படுபவர்களைச் சென்றடையவில்லை. நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால், அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறந்துவிடுவார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம். காஸாவிற்கு குழந்தை உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை மேலும் 100 லாரிகளில் வழங்க எதிர்பார்ப்பதாக ஐநா பேச்சாளர் ஒருவர் கூறினார்.

Related News