விஜயவாடா, ஆகஸ்ட்.03-
ஆந்திராவில் கிரானைட் குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவின் பபட்லா மாவட்டத்தில் உள்ள அந்தக் குவாரியிலங 16 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், 10 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.








