Oct 20, 2025
Thisaigal NewsYouTube
"இப்படி கூட சாவு வருமா.." கால்பந்து மைதானத்தை தாக்கிய மின்னல்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்!
உலகச் செய்திகள்

"இப்படி கூட சாவு வருமா.." கால்பந்து மைதானத்தை தாக்கிய மின்னல்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்!

Share:

ஜார்த்தா: இந்தோனேசியா நாட்டில் கால்பந்து போட்டி நடக்கும் போதே வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி உயிரிழந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

உலகின் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளிலும் கால்பந்து போட்டிக்குத் தனியாக ரசிகர்களே இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில காலமாகக் கால்பந்து போட்டிகளில் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தருபவையாகவே உள்ளன.

அப்படியொரு பகீர் சம்பவம் தான் இந்தோனேசிய நாட்டில் நடந்துள்ளது. அங்கே மழை பெய்து கொண்டு இருந்த போது விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து வீரர் ஒருவரை மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.

பகீர் சம்பவம்: இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான போட்டி நடந்துள்ளது. மழை பெய்து கொண்டு இருந்த போதும் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே அந்த வீரர் சுருண்டு விழுந்தார். அந்த கால்பந்து வீரர் சுபாங்கைச் சேர்ந்த செப்டைன் ரஹர்ஜா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related News