Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

ஆமதாபாத், ஜூன்.17-

ஆமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானமொன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

ஏர் இந்தியாவின் விமானம் (எண் AI 159) ஆமதாபத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்தது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, லண்டன் செல்லும் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம், கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட 270க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →