Jan 16, 2026
Thisaigal NewsYouTube
1000 சதுர கி.மீ ரஷ்ய பகுதியை கைப்பற்றிய யுக்ரேன் படைகள்- என்ன நடக்கிறது?
உலகச் செய்திகள்

1000 சதுர கி.மீ ரஷ்ய பகுதியை கைப்பற்றிய யுக்ரேன் படைகள்- என்ன நடக்கிறது?

Share:

ரஷ்யா, ஆகஸ்ட் 13-

ஜியான்லூகா அவாக்னினா மற்றும் ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு துறை நிருபர்

1000 சதுர கிலோ மீட்டர் ரஷ்ய பகுதியை யுக்ரேன் படைகள் கைபற்றி உள்ளதாக யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி கூறியுள்ளார். ரஷ்யா யுக்ரேன் இடையில் முழு கட்ட போர் தொடங்கிய இரண்டரை வருடத்தில் இதுவே யுக்ரேனின் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகும்.

இந்த தாக்குதல் தொடங்கிய ஏழு நாட்களுக்கு பிறகு யுக்ரேன் படைகள் ''குரஸ்க் பகுதியில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை'' மேற்கொண்டுள்ளதாக ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது. இப்போது ரஷ்யா மீதே போர் திரும்பியிருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

யுக்ரேனின் இந்த தாக்குதலை ஒரு ''ஆத்திரமூட்டும் செயல்'' என கூறிய ரஷ்ய அதிபர் புதின், ''எதிரி படைகளை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேற்ற'' ரஷ்ய படைகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

Related News