உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்திருந்தாலும், இன்றும் தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை குறைந்தது 500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியர்களின் வெறுப்பும் அவர்களின் ஆயுதங்களும், ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்று ரஷியா உக்ரைனின் மீது படை எடுத்தது முதல் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கிறது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.