Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா உட்பட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கங்கள்
உலகச் செய்திகள்

இந்தியா உட்பட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கங்கள்

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.13-

இந்தியா, மியான்மார் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள விவரம் வெளியாகியுள்ளது. உள்ளது. மியான்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் சுவடு இன்னமும் மறையவில்லை. ரிக்டரில் 7.7 ஆக பதிவான அந்நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்ததோடு, பலர் வீடுகள், உடமைகளை இழந்தனர்.

இந்நிலையில் மியான்மரின் மெய்க்டில்லா நகரத்தில் இன்று 5.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து தத்தம் இருப்பிடங்களில் இருந்து உடனடியாக வெளியேறினர். இதே போல, இமாச்சல பிரதேசம் மண்டியில் 3.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அந்நாட்டில் 2 நிலநடுக்கங்கள் முறையே 6.1 மற்றும் 3.9 என்ற ரிக்டரில் பதிவாகி உள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் ஆசிய நாடுகளில் மொத்தம் 4 நிலநடுக்கங்கள் பதிவாகின.

Related News