Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிரிட்டன் பிரதமருக்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட் வழங்கிய மந்திரி ஜெய்சங்கர்
உலகச் செய்திகள்

பிரிட்டன் பிரதமருக்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட் வழங்கிய மந்திரி ஜெய்சங்கர்

Share:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

சமீபத்தில் தீபாவளி பண்டிகை இங்கிலாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தேநீர் விருந்து அளித்தார்.

இந்நிலையில், தீபாவளி விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ உடன் கலந்துகொண்டார்.

இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.

Related News