Oct 19, 2025
Thisaigal NewsYouTube
உளவு செயற்கை கோளை 3-வது முறையாக ஏவும் வடகொரியா
உலகச் செய்திகள்

உளவு செயற்கை கோளை 3-வது முறையாக ஏவும் வடகொரியா

Share:

வடகொரியா, கடந்த ஆகஸ்டு மாதம், உளவு செயற்கைக் கோளை ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அக்டோபரில் 2-வது முறையாக ஏவிய உளவு செயற்கைக் கோளும் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் 3-வது முறையாக உளவு செயற்கைக் கோளை விண்ணில் ஏவி உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜப்பானிடம் வடகொரியா தெரிவித்துள்ளது.

அதன்படி வருகிற 30-ந்தேதிக்குள் உளவு செயற்கைக் கோளை ஏவுவதற்கான தனது திட்டத்தை ஜப்பானிடம் வடகொரியா கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பபாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறும்போது, வடகொரியா செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதே நோக்கமாக இருந்தாலும், ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் திர்மானங்களின் தொடர் மீறலாகும்.

Related News