ஜொகன்னஸ்பெர்க், டிசம்பர்.21-
தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பெர்க் அருகே பெக்கர்ஸ்டால் நகரில், மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு ஏன் நடந்தது என்பதற்கான காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் பண்டிக்கை கொண்டாட்டமொன்றின் போது இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், 16 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் இந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.








