அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று 3 பயணிகளை ஏற்றிச் சென்றது. அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது அந்த விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் மீட்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த விமானம் பிக் பியர் பகுதியில் உள்ள சாலை அருகே கீழே விழுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் உடல் சிதறி பலியானது தெரிய வந்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.