Sep 13, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயம்
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயம்

Share:

மாஸ்கோ, பிப்ரவரி.08-

ரஷ்யாவின் உஃபாவில் உள்ள மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர்கள் 4 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் விடுதியின் விளையாட்டு அரங்கில் நுழைந்த 2 பேர் பல மாணவர்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 4 இந்திய மாணவர்கள், உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 2 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் தாங்களே தங்கள் காயப்படுத்திக் கொண்டனர். இதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை