டென்பசார், செப்டம்பர்.25-
இந்தோனேசியாவின் பாலி தீவில் மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞரின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞரான Byron Haddow, பாலிக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் வில்லா ஒன்றின் நீச்சல் குளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில், நான்கு வாரங்களுக்குப் பிறகு அவரது உடல் ஆஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
பின்னர், அங்கு நடந்த பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் இதயம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது இதயம் திருடப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பாலி மருத்துவமனை மறுத்துள்ளது.