நியூயார்க், ஜூலை.29-
நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் அலுவலகக் கட்டடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தற்கொலை செய்து கொண்டார். 634 அடி உயரமுள்ள அந்த வானளாவியக் கட்டடத்தில் புகுந்த சம்பந்தப்பட்ட மர்ம நபர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட நால்வர் பலியாயினர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தமது உயிரை மாய்த்துக் கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வகை மன நலப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.








