Oct 12, 2026
Thisaigal NewsYouTube

அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எதிராகப் போராட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எதிராகப் போராட்டம்

வாஷிங்டன், ஏப்ரல்.06-

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் நிகழும் இப்போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். பல வெளிநாடுகளுக்கான நிதியைக் குறைத்ததுடன், வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்தது, ஊழியர்களின் எண்ணிக்கையைப் குறைப்பது, சில துறைகளை கலைப்பது என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும் அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விகிதத்தை உயர்த்தி உள்ளார். சீனா, உள்ளிட்ட நாடுகளுடன், அமெரிக்க நட்பு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து உள்ளன.

இந்நிலையில் டிரம்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன், புளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர். டிரம்ப்பைக் கண்டித்து பேரணி நடத்தினர். வேன்கள் மற்றும் கார்களில் வந்து போராட்டங்களில் பங்கேற்றனர்.

'கைவிடுங்கள்' என்ற பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். அப்போது, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் கோடீஸ்வரர்கள் தலையீடு, ஊழலை முடிவுக்கு கொண்டு வருதல், மருத்துவ உதவி மற்றும் உழைக்கும் மக்கள் நம்பி உள்ள திட்டங்களுக்கான கூட்டாட்சி நிதியைக் குறைப்பதை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

டிரம்ப் அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் அவருக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →
மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

மலேசியா–ஜோர்டான் உறவு மேலும் வலுப்பெறும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நம்பிக்கை

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் -  ஒருவர் பலி, 11 பேர் காயம்

ரியாத் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - ஒருவர் பலி, 11 பேர் காயம்

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

எகிப்து வருமாறு மாமன்னர், பிரதமருக்கு அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசி அழைப்பு

எகிப்து அதிபருக்கு மலேசியாவில் அரச மரியாதை: 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு

எகிப்து அதிபருக்கு மலேசியாவில் அரச மரியாதை: 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்ட வரவேற்பு

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

மியன்மாரில் நீடித்த அமைதிக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர் அன்வார் உறுதி

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை

அன்வார், மியன்மார் அதிபர் மின் ஆங் லாயிங் சந்திப்பு - மலேசியாவிலுள்ள மியன்மார் நாட்டவர்கள் குறித்து பேச்சுவார்த்தை