Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியது: 48 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியது: 48 பேர் உயிரிழப்பு

Share:

மாஸ்கோ, ஜூலை24-

ரஷ்யாவில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலையில் ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாநிலத்தில் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான Antonov An-23 4 ரக விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 42 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

Tynda விமான நிலையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி அடையாளம் காணப்பட்டது. ஹெலிகாப்படர் மூலம் தேடுதல் பணி தொடங்கிய போது, விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக் கொண்டது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானம் சோவியத் காலக் கட்டத்தைச் சேர்ந்தது என்றும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழைமையானது என்றும் தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானம் 1976ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும் சைபீரியாவின் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனம் அதை இயக்கியதாகவும் கூறப்பட்டது.

Related News