Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கனடாவை அதிரவைத்த தங்கத்திருட்டு, இலங்கையர் உட்பட 9 பேர் ஒருவருடத்தின் பின் கைது
உலகச் செய்திகள்

கனடாவை அதிரவைத்த தங்கத்திருட்டு, இலங்கையர் உட்பட 9 பேர் ஒருவருடத்தின் பின் கைது

Share:

கனடா, ஏப்ரல் 19-

டொராண்டோ பியர்சன் விமான நிலையதில் இடம்பெற்ற தங்க திருட்டு தொடர்பாக நேற்றைய தினம் ஏர் கனடா ஊழியர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை நிலையம் தெரிவித்துள்ளது.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொள்ளைச்சம்பவத்தில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழர் ஒருவரும் அடங்குகின்றார்.

புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் கூறினர் .

ப்ராஜெக்ட் 24 k (project 24 k) என்று அழைக்கப்படும் இந்த கூட்டுத் திருட்டு24 கரட் தங்கத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

அந்த வகையில் சுமார் 01 வருட காலத்திற்கு முன்னர் பியர்சன் விமானநிலையத்தில் வைத்து சுமார் 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 400 kg எடைகொண்ட 6600 தங்க கட்டிகள் 09 பேர் கொண்ட குழுமூலம் கொள்ளையடிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து நேற்று குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் பொலிஸாரால் அடையாளம் காணப்படுள்ளனர் .இதில் தமிழர் ஒருவர் இடம்பெறுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

37 வயதான பிரசாத் பரமலிங்கம் என்பவரே குறித்த திருட்டில் பங்கேற்றதாக சந்தேகத்தின் அடிப்படிடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது துப்பாக்கி கடத்தல்கள் ஆயுத விநியோகங்கள் தொடர்பாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன .

இவர் மட்டுமல்லாமல் இவருடன் கூட்டாளிகளாக ட்ரொண்டோ ,ப்ராம்ப்டன் மற்றும் ஓக்வில்லே போன்ற பிரதேசங்களைசேர்ந்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

திருட்டு நடந்த நேரத்தில் விமான நிறுவனத்தில் பணிபுரியும் அர்சலன் சவுத்ரி, குரோவர் ஆகியோருக்கு கனடா முழுவதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது .எனினும் அவர்கள் இருவரும் சிக்கிக்கொள்ளவில்லை.

Related News