கனடா, ஜூன் 04-
2006ஆம் ஆண்டு கனடா நீதிமன்றம் பிக்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பிக்டன் வான்கூவரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி பிக்டனுக்கும் சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
49 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பன்றிகளுக்கு இரையாகப் போட்ட தொடர் கொலையாளி ராபர்ட் பிக்டன் (74) கனடாவில் உள்ள சிறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.
கனடாவின் வான்கூவர் நகரில் 1990 முதல் 2000 வரை தொடர்ந்து பல இளம்பெண்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றிப் பண்ணை நடத்திவந்த ராபர்ட் பிக்டன் என்பவரை கைது செய்தனர்.

அவர் சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் உள்ள ஒரு பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.
போலீசார் பிக்டனை கைது செய்து விசாரணை நடத்தியபோது 49 பெண்களை வெட்டிக் கொன்று, உடலை வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இரையாக போட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் கனடா மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு கனடா நீதிமன்றம் பிக்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பிக்டன் கியூபெக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி பிக்டனுக்கும் சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்தச் சண்டையின்போது கைதிகள் பலர் சரமாரியாக தாக்கியதில் பிக்டன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கனடா ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.