கோலாலம்பூர், நவம்பர்.06-
உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் தர வரிசைப் பட்டியல் 2025-இன் படி, மலேசியா மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இதன் மூலம், மலேசியக் கடப்பிதழ், உலகின் முதல் மூன்று சக்தி வாய்ந்த பயண ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இச்சாதனையானது, மலேசிய பயண ஆவணத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையையும், அங்கீகாரத்தையும் பிரதிபலிக்கிறது என்று தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், மலேசியர்கள் உலகில் 174 நாடுகளுக்கு, விசா இன்றி பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் முதலிடத்தை UAE தக்க வைத்திருக்கும் நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இரண்டாம் நிலையில் உள்ளன.








