மிச்சிகன், செப்டம்பர்.29-
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் அதிவேகமாக வந்த அந்நபர், தடுப்புச் சுவர்களை மோதி உள்ளே நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் தேவாலயத்திற்கு தீ வைத்ததாகவும் அமெரிக்க வடக்கு மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்து கொண்டிருந்த வேளையில், அங்கு விரைந்து வந்த போலீசாரால், அந்நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “வன்முறையின் தொற்று நோய்” என்று குறிப்பிட்டுள்ளார்.