Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்த சம்பவம்: மரண எண்ணிக்கை 61 ஆக உயர்வு
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்த சம்பவம்: மரண எண்ணிக்கை 61 ஆக உயர்வு

Share:

ஜகார்த்தா, அக்டோபர்.07-

இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோவார்ஜோ நகரில் அல் கோசினி என்ற முஸ்லிம் பள்ளி இயங்கி வருகிறது. அண்மையில், அந்த வளாகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைந்தனர்.

இவ்விபத்தில் இதுவரை மாணவர்கள் 61 பேர் பலியானது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர், 12 முதல் 19 வயதுக்குட்பட்டோர். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

Related News

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி