புதுடில்லி, டிசம்பர்.11-
இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, நாடு தழுவிய நிலையில் விமானச் சேவைப் பாதிப்புகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பயணிகளிடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளது.
பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய இயலாமல் போனதற்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது மற்றும் கட்டண விலக்கு போன்ற நிவாரண நடவடிக்கைகளையும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட பெரிய இடையூறுகளுக்கான காரணத்தைக் கண்டறிய வெளிப்புற தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு, வாரியம் ஆராய்ந்து வருவதாக விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.








