Oct 30, 2025
Thisaigal NewsYouTube
உலகம் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்குகிறதா?
உலகச் செய்திகள்

உலகம் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்குகிறதா?

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-

இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் 6 நிமிடங்கள் முழுமையாக இருளில் மூழ்கும் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

இது 100 ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படும் அரிய நிகழ்வாக சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் இது தவறான தகவலாகும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா (NASA) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழவுள்ள மிக நீண்ட சூரிய கிரகணம், வரும் 2027 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. எனினும், இது பூமி முழுவதும் இருளில் மூழ்கும் நிகழ்வாக மாறாது என்று நாசா விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

Related News