Nov 23, 2025
Thisaigal NewsYouTube
துபாயில் இந்திய போர் விமானம் விபத்திற்குள்ளானது எப்படி? - விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது இந்திய விமானப் படை
உலகச் செய்திகள்

துபாயில் இந்திய போர் விமானம் விபத்திற்குள்ளானது எப்படி? - விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது இந்திய விமானப் படை

Share:

புதுடில்லி, நவம்பர்.22-

துபாய் விமான கண்காட்சியில், சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்திய போர் விமானமான தேஜஸ், விபத்தில் சிக்கியது குறித்து, விரிவான விசாரணையை மேற்கொள்ள இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.

அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம், நடுவானில் திடீரென செயலிழந்தது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த விமானக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின.

நிறைவு நாளான நேற்று, இந்தியாவின் தேஜஸ் போர் விமானம், வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானி நமான் சயால் உயிரிழந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நமான் சயாலின் மறைவிற்கு, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related News