வாஷிங்டன், அக்டோபர்.04-
காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் திட்டத்திற்கு, ஹமாஸ் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளதோடு, பணயக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இதனையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள இஸ்ரேல் – பாலஸ்தீன போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தான் விதித்த காலக் கெடுவிற்குள் ஹமாஸ் தனது பதிலைத் தெரிவித்து விட்டதால், இனி இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu கைகளில் அப்பொறுப்பு இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.