Oct 28, 2025
Thisaigal NewsYouTube
கனடாவில் பயங்கரத் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
உலகச் செய்திகள்

கனடாவில் பயங்கரத் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Share:

ஒட்டாவா, ஜூன்.04-

கனடா, டொரோண்டோவில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்றிரவு யார்க்டேல் அங்காடிக்கு தெற்கே உள்ள ப்ளெமிங்டன் வீதி அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வன்முறை எதனால் ஏற்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News