கோலாலம்பூர், அக்டோபர்.27-
நேற்று அக்டோபர் 26-ஆம் தேதி துவங்கிய 47-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று காலை மலேசியாவில் இருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டார்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காம்ப்ளெக்ஸ் பூங்கா ராயாவில் இன்று காலை 9.55 மணியளவில் "தி பீஸ்ட்" என்றழைக்கப்படும் புகழ் பெற்ற அதிபர் வாகனத்தில் டிரம்ப் வந்து இறங்கினார்.
அவரது வருகைக்காகக் காத்திருந்த மலேசிய அதிகாரிகளுடன் கைகுலுக்கிய டிரம்ப், காலை 10.05 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ விமானமான Air Force One-ல் ஏறிப் புறப்பட்டார்.
முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய மலேசிய நடனக் கலைஞர்கள் ஆடல் பாடலுடன் கூடிய பிரியா விடை அளித்தனர்.
அதனை சில நிமிடங்கள் கண்டு ரசித்த டிரம்ப், பின்னர் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.








