Nov 25, 2025
Thisaigal NewsYouTube
தவறான ஓடுபாதையில் தரையிறங்கிய ஆப்கான் விமானம்
உலகச் செய்திகள்

தவறான ஓடுபாதையில் தரையிறங்கிய ஆப்கான் விமானம்

Share:

புதுடில்லி, நவம்பர்.24-

டில்லி விமான நிலையத்தில் ஆப்கான் விமானம் வேறு ஒரு ஓடுபாதையில் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து புதுடில்லிக்கு FG 311 என்ற விமானம் புறப்பட்டது. டில்லி வான்வெளியில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம், ஓடுபாதை எண் 29L இறங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவ்விமானம், தவறுதலாக ஓடுபாதை எண் 29Rல் இறங்கி உள்ளது. ஓடுபாதையில் இருந்து 4 கடல்மைல் தொலைவில் விமானம் வந்த போது, தரையிறங்க ஏதுவாக ஒளிரும் சிக்னல் தரும் கருவி செயலிழந்தது.

பார்வை தெரிவுத்திறன் குறைவாக இருந்ததாலும், வழிகாட்டும் சிக்னல் கருவி செயலிழந்ததாலும் தவறுதலாக வேறு ஒரு ஓடு பாதையில் விமானத்தை தரையிறக்கியதாக விமானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கான் விமானம் தவறுதலாக இறங்கிய ஓடுபாதையில் வேறு எந்த விமானமும் இருக்கவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை காரணம் என்ன என்பது தெரியவரும்.

Related News