Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இந்தியா நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின
உலகச் செய்திகள்

இந்தியா நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின

Share:

இந்தியா, ஜூன் 04-

இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கக்கூடிய அரசாங்கத்தை தேர்வுசெய்யக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கின.

அந்நாட்டிலுள்ள மொத்தம் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில், ஆட்சியைப் பிடிப்பதற்கு, 272 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற, எதிர்க்கட்சி தரப்பினர், மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே, வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாஜக கூட்டணிக்கு ஓர் இடம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இம்முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இந்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுமா? அல்லது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 3ஆம் தவணைக்கு தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News