சிட்னி, அக்டோபர்.06-
சிட்னியில் பரபரப்பான சாலை ஒன்றில் திடீரென சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரை இன்று திங்கட்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்நபர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக, சாலையோரம் போவோர் வருவோரை நோக்கி, கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், அந்த 60 வயது மதிக்கத்தக்க நபருக்கு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்பு இல்லை என்பதை முதற்கட்ட விசாரணையில் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே வேளையில், அந்நபரிடமிருந்து 2 பெரிய துப்பாக்கிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.