Jan 17, 2026
Thisaigal NewsYouTube
காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்
உலகச் செய்திகள்

காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.23-

காஷ்மீரில் 56 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், அதனைப் பாதுகாப்பு வட்டாரங்கள் ஏற்கவில்லை. வெறும் கண்துடைப்புக்காக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு படையினரிடம் உள்ள ஆவணங்கள் படி காஷ்மீரில் 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். அதில் ஜெயிஷ் இ முகம்மது அமைப்பினர் - 18 பேர், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினர் - 3 பேர் உள்ளனர்.

அதேநேரத்தில் 17 பயங்கரவாதிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பது பாதுகாப்புப் படையின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Related News