டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் தொடர்ந்த நிலையில், இன்று அங்கே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தது. முதலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் சற்று தடுமாறினாலும் கூட அதன் பிறகு இஸ்ரேல் சரமாரி தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதல்கள் தீவிரமாக இருந்த நிலையில், அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளிலும் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தின. இருப்பினும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
போர் நிறுத்தம்: இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் பிணையக் கைதிகள் வெளியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. கத்தார் மத்தியஸ்தனாம் செய்ய இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மஜீத் அல்-அன்சாரி கூறுகையில், "வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணிக்குச் சண்டை நிறுத்தம் தொடங்கும்... மேலும் அதே நாளில் உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்குப் பிணையக் கைதிகளில் முதல் பேட்ஜ் விடுவிக்கப்படுவார்கள்" என்றார். அதாவது இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்தப் போர் நிறுத்தம் தொடங்க உள்ளது. மேலும், இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.