மாலத்தீவு: இந்தியா மாலத்தீவு மோதல் தொடரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த நாட்டிலேயே எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியா குறித்தும் இந்தியப் பிரதமர் மோடி குறித்தும் அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய கருத்துகளே இதற்கு காரணமாகும்.
மன்னிப்பு கேட்கணும்: இதற்கிடையே மாலத்தீவில் இருந்து இப்போது புதிய குரல் எழுந்துள்ளது. அதாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸூ முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அங்குள்ள ஜும்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இந்தியா மற்றும் மோடி குறித்து மூன்று மாலத்தீவு அமைச்சர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இப்ராஹிம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சீனா பயணத்திற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு மாலத்தீவு அதிபர் முய்ஸுவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா மற்றும் மாலதீவுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு குறித்து, அந்த நாடு உடனான உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது. நமது நாட்டிற்கு என்று ஒரு கடமை உள்ளது, அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்