Jun 13, 2026
Thisaigal NewsYouTube
ஹிமாச்சலில் மீண்டும் மோசமான நிலச்சரிவு
உலகச் செய்திகள்

ஹிமாச்சலில் மீண்டும் மோசமான நிலச்சரிவு

Share:

சிம்லா, செப்டம்பர்.06-

ஹிமாச்சல் பிரதேசத்தில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் பல வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையின் போது, நிலச்சரிவும் ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 3 நாட்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடும் நிலச்சரிவுகள் காரணமாக, நான்கு தேசிய நெடுங்சாலைகள், ஆயிரத்துக்கும் அதிகமான சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. மீட்புப் பணிகள் நடந்து வந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

இந்நிலையில், சிம்லா, கின்னார் மாவட்டங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

நிலச்சரிவு ஏற்படும் போது அதில் 5 பேர் சிக்கிக் கொண்டதாகவும், தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். 5 வீடுகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் மீட்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!