Nov 1, 2025
Thisaigal NewsYouTube
இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் மற்றும் இல்லமும் பறிக்கப்பட்டது
உலகச் செய்திகள்

இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் மற்றும் இல்லமும் பறிக்கப்பட்டது

Share:

லண்டன், அக்டோபர்.31-

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் மீதமுள்ள பட்டங்களைப் பறித்து, அவரை அரச இல்லமான Windsor-ரிலிருந்து வெளியேற்றுவதற்கான முறையான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ, இனி Andrew Mountbatten Windsor என்று அழைக்கப்படுவார்.

மன்னர் சார்லஸின் இளைய சகோதரரும், மறைந்த இரண்டாம் எலிசபெத் அரசியாரின் இரண்டாவது மகனுமான ஆண்ட்ரூ, தனது நடத்தை மற்றும் அமெரிக்க பாலியல் கடத்தல்காரர் Jeffrey Epstein -னுடனான தொடர்புகள் காரணமாக பெருகிய அழுத்தத்தை எதிர்கொண்டார். இந்த மாதத் தொடக்கத்தில், அவர் தனது Duke Of York பட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆண்ட்ரூ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படுகிறது என்று அரண்மனை தெரிவித்துள்ளது.

Related News