Oct 19, 2025
Thisaigal NewsYouTube
களமிறக்கப்பட்ட "ஹப்சோரா!" காசாவை சுற்றும் கழுகு கண்கள்.. இஸ்ரேல் எடுத்த பகீர் முடிவு.. அடுத்து என்ன
உலகச் செய்திகள்

களமிறக்கப்பட்ட "ஹப்சோரா!" காசாவை சுற்றும் கழுகு கண்கள்.. இஸ்ரேல் எடுத்த பகீர் முடிவு.. அடுத்து என்ன

Share:

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் ஏஐ மாடல்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது போரை முழுமையாக வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. இப்போது காசாவுக்குள் புகுந்து ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையே இந்த போரில் காசா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் ஏஐ மாடல்களை பயன்படுத்தியதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது. இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஏஐ மாடல்: அதாவது காசா பகுதியில் எங்கெல்லாம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அங்கெல்லாம் ஏவுகணை தாக்குதலை நடத்த இஸ்ரேல் இந்த ஏஐ மாடலை பயன்படுத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இஸ்ரேல "ஹப்சோரா" என்ற ஏஐ மாடலை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போரில் ஏஐ மாடல்களை பயன்படுத்துவது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான போர்களில் ஏஐ மாடல்களை பயன்படுத்தத் தொடங்கினால் அது பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் ஏஐ பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது.. உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைப்பது ஆகியவற்றில் ஏஐ சிறந்து விளங்குகிறது. மேலும், தானாகவே ஏவுகணைகளை அனுப்பவும் கூட ஏஐ மாடல்களுக்கு திறன் இருக்கிறது.

எதற்கு உதவும்: இந்த ஏஐ பயன்பாடு என்பது துல்லிய தாக்குதல்களை நடத்த உதவுவதாகவும் பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க உதவுவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், இது அவ்வளவு எளிமையானது இல்லை. ஏஐ மாடல்கள் என்பது விரிவான டேட்டா மற்றும் அல்காரிதம்களை நம்பியே அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது. இதனால் பக்கச்சார்பு மற்றும் தவறான முடிவுகள் எடுக்கப்படும் அபாயம் இருக்கிறது.

Related News