Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!
உலகச் செய்திகள்

இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!

Share:

கனடாவில் இந்துக்கள் கோவில் தாக்கப்பட்டதை கண்டித்து கோவில் அருகே இந்துக்கள் போராட்டம் நடத்த முயற்சித்த போது, கோவில் அருகே கூடினால் கைது செய்யப்படும் என்று கனடா போலீசார் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்தில் ஹிந்து சபை கோயில் உள்ள நிலையில், அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து குழந்தைகள் பெண்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்துக்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கோயில் முன்பு இந்துக்கள் கூடி போராட்டம் நடத்திய நிலையில், அதில் ஏராளமான இந்துக்கள் கலந்து கொண்டனர். அப்போது, போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக கோவிலுக்குள் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்றும், அனைவரும் கலந்து செல்ல வேண்டும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News