சிங்கப்பூர், செப்டம்பர்.01-
சிங்கப்பூரில் பதிவுச் செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பலும் மால்டாவில் பதிவுச் செய்யப்பட்ட சரக்குக் கப்பலும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், தானா மேராவுக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தொலைவில் மரின் டைனமோ Marine Dynamo என்ற சிங்கப்பூர் எண்ணெய்க் கப்பலும் Flag Gangos என்ற மால்டா சரக்குக் கப்பலும் இன்று திங்கட்கிழமை காலை 9.25 மணியளவில் மோதிக் கொண்டன.
இரண்டு கப்பல்களும் சீரான நிலையில் இருப்பதாகக் கடல்துறை, துறைமுக ஆணையம் குறிப்பிட்டது.
மரின் டைனமோ கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு லேசான சிராய்ப்புகளுடன் சுளுக்கும் ஏற்பட்டதாக ஆணையம் சொன்னது. பாதிக்கப்பட்ட அந்த ஊழியருக்குக் கப்பலில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மோதிக் கொண்ட இரண்டு கப்பல்களின் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.