Jan 17, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேர், 7 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேர், 7 பேர் உயிரிழப்பு

Share:

இஸ்லாமாபாத், ஜூன்.27-

பாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அங்கு ஏராளமானோர் செல்கின்றனர். அந்த வகையில், ஸ்வாட் ஆறு அருகே 18 பேர் சுற்றுலா சென்றனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 18 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

உயிர் பிழைத்த ஒருவர் சம்பவத்தை விவரித்துள்ளார். திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டத் தலைவர்கள் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related News