Oct 25, 2025
Thisaigal NewsYouTube
வட்டி விகிதத்தைக் குறைத்தது இந்திய ரிசர்வ் வங்கி
உலகச் செய்திகள்

வட்டி விகிதத்தைக் குறைத்தது இந்திய ரிசர்வ் வங்கி

Share:

புதுடெல்லி, ஏப்ரல்.09-

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்திற்கு ஆதரவை வழங்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதாக இன்று அறிவித்துள்ளது.

பணவியல் கொள்கை குழுவான எம்பிசி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

பாலிசி வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6 விழுக்காடாக ஆக மாற்றி உடனடியாக அமலுக்குக் கொண்டு வர 'பணவியல் கொள்கை குழு உறுப்பினர்கள், ஒப்புதல் அளித்துள்ளனர்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.

வட்டி விகிதம் குறைக்கப்பட்டது மூலம் வீடு, வாகன மற்றும் நிறுவனக் கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News