டேராடூன், ஜூலை.27-
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மானசா தேவி கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர். அப்போது திடீரனெ கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.








