துபாய், மே 18-
பணமில்லாத காரணத்தால் பொருளாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் காரணிகள் என்ற பட்டியல் மிகவும் பெரிது என்றாலும், அதில் தற்போது துபாய் அன்லாக்ட் (Dubai Unlocked) என்ற பெயரும் இணைந்துவிட்டது. அடிப்படை செலவுகளுக்குக்கூட பணம் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டில், உயர்மட்டத்தை சேர்ந்தவர்கள், துபாயில் பில்லியன் கணக்கான சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏழை மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை சாப்பிட முடியாத நிலையில் இருப்பதும், அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கலக்கமடைந்த மக்கள் கிளர்ச்சியில் இறங்கி உள்ளனர் என்ற செய்திகள் வந்திருக்கும் பத்திரிகையிலேயே துபாய் அன்லாக்ட் என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது நகைமுரணாக உள்ளது.
ஏனென்றால், பாகிஸ்தான் மக்கள் ஏழைகளாக இருக்கலாம், நாடு பொருளாதார ரீதியில் அதல பாதளத்திற்குள் செல்லக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், கூறியுள்ளது. இந்த ஏழை நாட்டின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என உயர்மட்ட அதிகாரிகள், துபாயில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதை துபாய் லீக்ஸ் வெளிப்படுத்துகிறது.
கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய பாகிஸ்தானியர்கள் துபாயின் ஆடம்பரமான பகுதியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். OCCRP இன் 'துபாய் அன்லாக்டு' முயற்சியில் கண்டறியப்பட்ட விவரங்களின் ஒரு பகுதி அறிக்கையிலிருந்து கசிந்த தகவல்கள் இவை. அரசியல், ராணுவம், வங்கி மற்றும் நிர்வாகத்துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனிநபர்களின் சொத்து தொடர்பான விவரங்களை துபாய் அன்லாக்ட் (Dubai Unlocked) அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
பாகிஸ்தானியர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 23,000 சொத்துக்கள் இருப்பதாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த “துபாய் அன்லாக்டு” முயற்சியை உலகளாவிய ஊடகங்கள் நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானின் பிரச்சனைகளுக்கான ஆணிவேர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.








