Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஆயுதங்களை ஒப்படைக்கும்படி மாணவர்களுக்கு நேப்பாள ராணுவம் உத்தரவு
உலகச் செய்திகள்

ஆயுதங்களை ஒப்படைக்கும்படி மாணவர்களுக்கு நேப்பாள ராணுவம் உத்தரவு

Share:

கட்மாண்டு, செப்டம்பர்.10-

போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்புச் சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு நேப்பாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேப்பாளத்தில் சமூக வலைதளங்களை அரசு முடக்கியதை கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. தடை மீறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். நாடாளுமன்றம், அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு தீ வைத்தனர். அரசியல்வாதிகள் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், அரசியல் குழப்பம் ஏற்படவே அங்கு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டங்களைக் கைவிட்டு விட்டு சுமூகமான தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும். தற்போதைய கடினமான சூழ்நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டி உள்ளது. பொதுமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கின்றனர் என ராணுவம் கூறியது.

இதனிடையே போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் , வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும். யாரேனும் அதனை வைத்து இருந்தால், அருகில் உள்ள பாதுகாப்பு அமைப்பு அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆயுதங்களைச் சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தரலாம். அவர்களை ஆயுதங்களை ஒப்படைக்க அறிவுறுத்தலாம். இதனை மீறி யாரேனும் ஆயுதங்களை வைத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் நினைவுறுத்தியுள்ளது.

Related News

ஆயுதங்களை ஒப்படைக்கும்படி மாணவர்களுக்கு நேப்பாள ராணுவம் உ... | Thisaigal News