பாங்கோக், நவம்பர்.26-
தென் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 310 மலேசியர்கள் மீட்கப்பட்டு விட்டனர். இன்னும் பத்து பேரை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பத்து பேரும் Hat Yai –யில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலையில் சுங்கை பட்டாணி தொண்டூழிய தீயணைப்புப் படையினர், மூன்று டிரெய்லர் லோரிகள் மூலம் 310 மலேசியர்களை ஏற்றி வந்து, மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் இறக்கி விட்டனர்.
எஞ்சிய பத்து பேரையும் மீட்பதற்கான நடவடிக்கை சொங்க்லாவில் உள்ள மலேசியத் துணை தூதரக உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








