Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

பாய்மரப் படகில் சென்றவரை திமிங்கிலம் விழுங்கிய பதற வைக்கும் சம்பவம்

Share:

சாண்டியாகோ, பிப்.14-

சிலி கடல் பகுதியில், பாய்மரப் படகு பயணத்தில் இருந்த ஆடவரைத் திமிங்கிலம் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அட்ரியன் சிமன்காஸ் கடந்த வார இறுதியில் தனது தந்தையுடன் புன்டா அரீனாஸ் நகருக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் பாய்மரப் படகு பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​ஹம்பக் திமிங்கலம் ஒன்று திடீரென தோன்றி அவரை விழுங்கியது.

தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அட்ரியன், திடீரென்று ஏதோ ஒரு அலையால் தூக்கப்பட்டது போல் கண்டேன். நீலமும் வெள்ளையும் ஏதோ ஒன்று என் முகத்திற்கு அருகிலும் மேலேயும் கடந்து செல்வதை உணர்ந்தேன். என்ன நடக்கிறது என்று நான் பீதியடைந்தேன். பின்னர் நான் நீரில் மூழ்கி விழுங்கப்படுவதை உணர்ந்தேன்," என்று கூறினார்.


மற்றொரு பாய்மரப் படகில் இருந்த அவரது தந்தை டெல் சிமான்காஸ் இந்த சம்பவத்தைப் பதிவு செய்தார். சம்பவத்தின் போது தாம் இறந்து விடுவோம் என நினைத்ததாக அட்ரியன் கூறினார். எனினும் விழுங்கப்பட்ட மூன்று வினாடிகளில் திமிங்கிலம் வெளியே கக்கியதால் தாம் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமே என்றாரவர்.

Related News